விருப்பம் இருந்தால் கட்சியில் இரு, இல்லையென்றால் வெளியேறு- சீமான் கரார்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

விருப்பம் இருந்தால் கட்சியில் இரு, இல்லையென்றால் வெளியேறு- சீமான் கரார். வேட்பாளர்களை தேர்வு செய்ய மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசிக்க முடியாது. விருப்பமிருந்தால் கட்சியில் வேலை செய்யலாம் இல்லையென்றால் சென்றுவிடலாம் என்று இயக்குனர் சீமான் தனது தொண்டர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னையில் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள சார் திரைப்படத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த படத்தில் இறுதியாக சாமியை கொன்று விட்டேன் நடிகர் விமல் வசனம் பேசி இருப்பார் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அறிவை தடுக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட வேண்டும். அதில் சாமி என்ன ஆசாமி என்ன என்றார்.

சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் ஒழிந்து விடுவார்கள் என பவன் கல்யாண் பேசிய கருத்திற்கு பதில் அளித்த சீமான், அவர்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றது என்கிறார்கள். நாங்கள் இல்லை என்கிறோம், எங்களுடையது சகோதரத்துவம் சமத்துவம். வணங்கக்கூடிய கடவுளை மரியாதையாக அழைப்பதற்காக பெருமாள், திருமாள் என்று அழைத்தோம், பெருமாள் யார் என்று தெரியுமா? எங்கள் கூட்டத்தில் ஆடு,மாடு மேய்த்த இறைவன் தான் பெருமாள். ஆடு மாடு மேய்த்தவர்களை தீட்டுப்பட்டு விட்டது என்கின்றார்கள் இதெல்லாம் கேட்பதற்கு வேடிக்கையாக இருங்கின்றது என்றார்.

இந்தியாவில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்ற போது 5 நிமிடத்தில் முடிய வேண்டிய லட்டு பிரச்சனையை அகில உலக பிரச்சினையாக மாற்றி விட்டார்கள். லட்டு உருட்டுவதற்கு 5 நிமிடம் போதும் ஆனால் இவர்கள் 50 நாட்களாக உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

மேலும் தவறு செய்யாத நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டது குறித்து பேசி அவர்,பெருந்தன்மையாக கேட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். அவர் பெரிய படம் ஒன்று எடுத்துள்ளார், ஆந்திராவில் பெரிய முதலீடு கொடுத்து பல முதலாளிகள் வாங்கியிருப்பார்கள், அந்த விவகாரத்தில் தொடர்ந்து பதில் சொல்லி கொண்டிருந்தால் படம் பாதிக்கப்படும்.

அதனால் தான் அவர் மன்னிப்பு கேட்டிருப்பார், மன்னிப்பு கேட்டதால் கார்த்தி சிறியவர் ஆகிவிடவில்லை மன்னிப்பு கேட்க வைத்ததால் பவன் கல்யாண் பெரிய ஆளும் ஆகிவிடவில்லை. மன்னிப்பு கேட்டதால் கார்த்தி தான் பெரிய மனிதர் என்றார்.

மெரினா கடற்கரையில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்தவர்கள் வெப்பத்தால் மட்டுமே உயிர் இழந்தார்கள், இதற்கு அரசு எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் சிவசங்கர் பேசிய கருத்திற்கு பதில் அளித்த சீமான், அதை நான் ஒரு பெரிய துயர நிகழ்வாக பார்க்கிறேன். அதில் கருத்து சொல்ல எனக்கு விருப்பமில்லை நான் மிகவும் வலியோடு இருக்கின்றேன்.

வானத்தில் நிறைய ஹெலிகாப்டர் வானூர்திகள் பறந்து கொண்டிருந்தது, ஆனால் குரங்கணி தீ விபத்து, கன்னியாகுமரியில் ஏற்பட்ட புயலில் 200 க்கும் மேற்பட்டோர் இறந்து கிடந்த போது இந்த விமானங்கள் எங்கே சென்றது.?

அன்றைக்கு இந்த விமானங்கள் வந்திருந்தால் என்னை காப்பாற்றிய விமானம் வந்திருக்கிறது என்று பார்த்திருப்பார்கள்.. இவையெல்லாம் இருக்கிறது என்பதே இப்பதான் தெரிகின்றது. இத்தனையும் வித்தைக்காட்ட மட்டும் தான் வைத்திருக்கின்றார்கள் என்பது இப்போது தான் புரிகிறது.

அன்றைக்கு இராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் இரவு நேரத்தில் எங்கு தேடுவது என்று கேட்டார்கள் இரவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடந்தால் சண்டையை பகலில் வைத்து கொள்ளலாம் என்று சொல்வீர்களா என்று கேட்டேன்..

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்ச்சியாக கட்சியிலிருந்து வெளியேறுவதை குறித்தான கேள்விக்கு பதிலளித்த சீமான், நான் வேண்டுமானால் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் சென்று காலில் விழுந்து கும்பிட்டு மரியாதை கொடுக்கட்டுமா.?

மாவட்டச் செயலாளர், மண்டலச் செயலாளர் பொறுப்பு கொடுப்பதே ஒரு மரியாதை தான். சட்டமன்ற வேட்பாளர்களை தேர்வு செய்ய மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசிக்க முடியாது. விருப்பமிருந்தால் கட்சியில் வேலை செய்யலாம் இல்லையென்றால் வெளியில் சென்றுவிடலாம்.

தொகுதியில் இருப்பவர்களே வேட்பாளரை தேர்வு செய்து கொள்வார்கள் என்றால் கட்சியை நடத்த நான் தேவையில்லையே. அவர்களே ஒரு கட்சியை தொடங்கி நடத்திக் கொள்ளலாம் என்றார்.

 

Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img