மகன் இறந்ததை கூட தெரியாமல் மூன்று நாட்களாக உணவுக்காக ஏங்கிய பார்வையற்ற தம்பதி .

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பார்வையற்ற மாற்றுத்திறனாளி வயதான தம்பதியினர் மகன் இறந்ததை அறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள்   மகன் சடலத்துடன் காத்திருந்த சம்பவம்.

தெலங்கானா மாநிலம் : ஐதராபாத்தில் உள்ள நாகோல் நகரில் உள்ள ஜெய்ப்பூர்  ஆந்திரா காலனியில் ரமணா (65), சாந்தகுமாரி (60) என்ற  பார்வையற்ற வயதான மாற்றுதிறனாளி தம்பதியினர் தங்கள் இளைய மகனுடன் வசித்து வருகின்றனர். பார்வையற்ற தம்பதிக்கு இரண்டு மகன்கள்  மூத்த மகன் பிரதீப் மனைவி குழந்தைகளுடன்  வேறு இடத்தில் வசித்து வருகிறார்.  இளைய மகன் பிரமோத்திற்கு (30)   திருமணம்  ஆனாலும் சில காரணங்களால் அவரது மனைவி அவரை விட்டு சென்றுவிட்டார். இதனால் பெயிண்டர் வேலை செய்யும் பிரமோத் மதுவுக்கு அடிமையானலும்  தனது  பார்வையற்ற பெற்றோரை நல்லபடியாக கவனித்து கொண்டு வந்தார். இந்நிலையில் பிரமோத் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு உணவு வழங்கி பின்னர் தூங்க சென்றுள்ளார். அதன் பிறகு எழுதிருக்கவில்லை தூக்கத்திலேயே பிரமோத் இறந்து விட்டார்.  இதனை அறியாத  வீட்டில் இருந்த பார்வையற்ற பெற்றோரால் தங்கள் மகன் இறந்துவிட்டதை அடையாளம் காண முடியவில்லை.  எத்தனை முறை போனில் யாரும் அழைத்தாலும் பதில் சொல்லவில்லை.  இதனால் பசியுடன் உணவு மற்றும் தண்ணீர் கேட்டு துடித்தனர்.   ஆனால் யாரும் பேசவில்லை  முதுமையில் இருக்கும் பார்வையற்ற நிலையில் நிர்க்கதியாக இருந்தனர். குறைந்த பட்சம் அக்கம்பக்கத்தினர் கூட யாரும் வந்து பார்க்க வரவில்லை.

ஐதராபாத் : ஒரே வீட்டில் மகனின் சடலத்துடன் பார்வையற்ற தம்பதி – உணவுக்காக ஏங்கிய பரிதாபம் .

 

இதனால் ஒரு பக்கம் துர்நாற்றம், இன்னொரு பக்கம் பசியால் இருந்தனர். இந்நிலையில்  இறந்து மூன்று நாட்கள் ஆனதால் , சடலம் அழுகிய நிலையில் வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியது. துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நாகோல் இன்ஸ்பெக்டர் சூர்யநாய்க், எஸ்.ஐ சிவநாகபிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்த போது ஒரு பக்கம் பசியால் துடிக்கும் வயதான மாற்றுதிறனாளி தம்பதி, மறுபுறம் தாங்க முடியாத துர்நாற்றம் என தவித்தவர்களை வீட்டின் வெளியே அழைத்து வந்தனர். பின்னர்  வயதான தம்பதியினரை குளிப்பாட்டி உணவு வழங்கினர். பின்னர் அவர்களது இளைய மகன் பிரமோத் இறந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். பிரமோத்திற்கு வலிப்பு நோய் உள்ளதால் தூக்கத்தில் இருக்கும் போது வலிப்பு ஏற்பட்டு  பிரமோத் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரமோத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர்  மற்றொரு மகன் பிரதீப்பை வரவழைத்த போலீசார்  வயதான தம்பதியை அவரிடம் ஒப்படைத்தனர்.

2877 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை.

Video thumbnail
திருமாவளவன் பிறந்த நாள் | ராப் இசைப் பாடகர் வேடனுக்கு அழைப்பு
01:01
Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img