கேரள அரசு ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் பூஜை நேரம், போக்குவரத்து வசதி இவைகளை தெரிந்துகொள்ள 6 மொழிகள் கொண்ட AI தொழில் நுட்ப உதவியுடன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘Swami Chatbot’ எனும் செயலியை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது . அதில் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் AI தொழில் நுட்ப உதவியுடன் பூஜை நேரம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ளும் வகையில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.