செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு – நடிகை தமன்னாவுக்கு சம்மன்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img
செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு – நடிகை தமன்னாவுக்கு சம்மன்
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நடிகை தமன்னா நேரில் ஆஜராக மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு - நடிகை தமன்னாவுக்கு சம்மன்
சமீபத்தில் தனது படத்தில் ஒரு பாட்டுற்காவது ஆட வேண்டும் என தேடப்படும் நடிகைகளில் படங்களில் நடித்து தென்னந்திய சினிமாவில் பிரபலமான தமன்னா பாலிவுட் படங்களிலும் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் மெகா மோசடியில் சிக்கிய மகாதேவ் செயலி தொடர்புடைய மற்றொரு செயலியான ஃபேர் பிளே (fair play ) என்ற செயலி விளம்பரத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு - நடிகை தமன்னாவுக்கு சம்மன்அனுமதியின்றி ஐபிஎல் போட்டிகளை சட்டவிரோதமாக அந்த செயலி நேரலை ஒளிபரப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக நேரலை செய்ததால் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற தனியார் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செயலில் விளம்பரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை ஜாக்லின் பெர்னாண்டஸ், பாடகர் பாட்ஷா ஆகியோரை தொடர்ந்து நடிகை தமன்னாவும் நடித்திருந்தார்.

ஃபேர் பிளே செயலியானது மகாதேவ் செயலியுடன் தொடர்புடைய நிறுவனம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மகாதேவ் செயலி மட்டுமல்லாது தொடர்புடைய 8 செயலிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா மகாராஷ்டிரா ஆகிய காவல்துறையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த செயலிகள் தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

செயலியில் ஐபிஎல் ஒளிபரப்பு - நடிகை தமன்னாவுக்கு சம்மன்

மும்பை தாதா தாவூத் இப்ராஹீம் மற்றும் பல அரசியல் பிரமுகர்களின் பணம் இந்த ஆப்பின் மூலம் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் விசாரணை விஸ்வரூபம் எடுத்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் பாலிவுட் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத் மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அந்த நாளில் தான் இந்தியாவில் இல்லை என்றும் அதற்கு பதிலாக தனது பதிலை பதிவு செய்ய மற்றொரு தேதியை ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

https://www.mugavari.in/news/india-news/mp-election/2010

இந்த நிலையில் நடிகை தமன்னா வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி மகாராஷ்டிர சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த செயலியின் சட்ட விரோத பணப்பரிமாற்ற விவகாரத்தில் தொடர்புடைய நடிகர் நடிகைகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதா என்ற அடிப்படையிலும் வேறு ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Video thumbnail
கிறிஸ்தவர்கள் மீது இந்து அமைப்புகள் தாக்குதல் | மௌனம் காக்கும் விஜய், சீமான் | TVK | Vijay | Seeman
13:10
Video thumbnail
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க புறப்பட்டார் நடிகை பூஜா ஹெக்டே
00:36
Video thumbnail
சுனாமி 21வது ஆண்டு நினைவு தினம் | பாஜக சார்பில் அஞ்சலி செலுத்திய நிர்வாகி குஷ்பு
01:09
Video thumbnail
இது 'One Last Chance' னா.. 'ஜனநாயகன்' ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக மலேசியா புறப்பட்ட அனிருத்
01:12
Video thumbnail
மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னையில் இருந்து புறப்பாட்டார் விஜய்
00:46
Video thumbnail
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் இந்துத்துவா கும்பல்
02:01
Video thumbnail
மகனின் பிறந்தநாளை நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தொழிலதிபர்..
00:53
Video thumbnail
ராகுல் காந்தியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
00:19
Video thumbnail
"தோனி CAPTAINCY ரொம்ப பிடிக்கும்" மனம் திறந்த முதல்வர்
00:48
Video thumbnail
நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர். கிரிக்கெட்டில் பைத்தியமாக இருந்திருக்கிறேன்
01:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img