மோடி அரசு மீது ஆஸி. பெண் பத்திரிக்கையாளர் பரபரப்பு புகார்
இந்தியாவில் தேர்தல் செய்திகளை சேகரிக்க விடாமல் நாட்டை விட்டு வெளியேற தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் செய்தியாளர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏபிசி எனப்படும் ஆஸ்திரேலியா செய்தி ஒளிபரப்பு கழகத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி டயஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக டெல்லியில் தங்கி பணியாற்றி வருகிறார்.
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அவனி டயஸ் சமீபத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சையானது.
இந்த செய்தி எல்லை மீறிய செயல் என்று கூறி அவனி டயஸின் விசாவை வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்தது.
இதுகுறித்து தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவனி டயஸ் தான் இந்தியாவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்கவும் தமக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அவனி டயஸ் ஜனநாயகத்தின் தாய் என்று பிரதமர் மோடி அழைக்கும் மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக தாங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.
We were also told my election accreditation would not come through because of an Indian Ministry directive. We left on day one of voting in the national election in what Modi calls "the mother of democracy”.
Hear more on our podcast Looking for Modi: https://t.co/rn6wTkdI21
— Avani Dias (@AvaniDias) April 22, 2024
ஆஸ்திரேலியா அரசின் தலையிட்டால் மேலும் இரண்டு மாதம் வீசா நீட்டிக்கப்பட்டாலும் தமது விமான புறப்பட்ட பிறகே இந்திய அரசு வீசா நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்ததாக அவனி டயஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதனிடையே இந்தியாவில் நடக்கும் தேர்தல் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை மேற்குலக மீடியாக்கள் வெளியிடுவதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/ipl-ticket-sale-arrest/1814
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்த தேர்தலில் மேற்குலக மீடியாக்கள் தங்களையும் ஒரு அரசியல் போட்டியாளர் போல கருதிக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாக கூறி சாடினார். தேர்தல் நேரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் வைத்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.