ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 6 சதவீதம் வரை உயர்த்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.
இதற்கு முன்பு தமிழகத்தில் கடந்த 2022 ஏப்ரல் 1ம் தேதி சொத்து வரி என்பது உயர்த்தப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டது. சென்னையை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டடத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருந்தது.
முன்னதாக சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்சாயத்து இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.