திருப்பதி : 30மணி நேரம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருப்பு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருப்பதி : 30மணி நேரம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி கோயிலில் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்கின்றனர். கோடை விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

டிக்கெட் இல்லாமல் நேரடியாக  தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முப்பது மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வைகுண்டம் காத்திருப்பு அறையில் அனைத்து அறைகளும் நிரம்பிய நிலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர்.

ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  அதே போல் இலவச நேரம் ஒதுக்கீடு பெற்றவர்கள் ஏழு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏழுமலையான் கோயிலுக்கு இனிமேல் வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் கோயிலை சுற்றியுள்ள தேவஸ்தான இலவச லாக்கரில் உடைமைகளை வைத்து விட்டு ஆங்காங்கே தங்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் வரும் பக்தர்கள் காலை 6:00 மணிக்கு பிறகு தரிசனத்திற்கான வரிசையில் அனுமதிக்கப்படுவர் எனவும் மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img