அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் – டைட்டில் டீசரை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் - டைட்டில் டீசரை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்!நடிகர் அர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் – கார்த்தி கூட்டணியில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அடுத்தது லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அர்ஜுன் தாஸ். இந்த இரண்டு படங்களிலுமே வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் தற்போது ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்குகிறார். ஹேசம் அப்துல் வாகப் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் இன்று (அக்டோபர் 5) மாலை வெளியாகும் என போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் டீசரை லோகேஷ் கனகராஜ் வெளியிட இருப்பதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img