நடுவானில் பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டு – அமைச்சர் சா.மு.நாசர்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழர்கள் எந்த இடத்திலும் பிரதிபலன் பாராமல் உதவி செய்யக்கூடியவர்கள் என்று ஆண் செவிலியரை அமைச்சர் சா.மு.நாசர் பாராட்டியுள்ளார். ஆந்திர மாநில  கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நடுவானில் பிரசவம் பார்த்த செங்கல்பட்டை சேர்ந்த ஆண் செவிலியருக்கு சிறுபான்மையினர் அமைச்சர் சா.மு.நாசர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடுவானில் பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டு - அமைச்சர் சா.மு.நாசர்

 

சிங்கப்பூரிலிருந்து கடந்த 22ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அதில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தாகூர் மற்றும் 8 மாத கர்ப்பிணி பெண் தீப்தி (37) என்பவரும் பயணித்துள்ளனர். விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே தீப்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் இருந்து  சென்னை வரையிலான விமான பயண நேரம் மொத்தம் 4.30 மணி நேரம் என்பதால் சென்னையில் தரையிறங்கும் வரை பிரசவத்தை தள்ளிப்போடுவது பெரும் ஆபத்தில் முடியும்.

த.வெ.க மாநாடு; 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த விமானத்தில் செங்கல்பட்டு மாவட்டம், வளர்குன்றம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (28) என்ற ஆண் செவிலியர், அந்த அசாதாரணமான சூழ்நிலையை சமாளித்து பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் நல்லபடியாக தாய் மற்றும் சேயை காப்பாற்றியுள்ளார். பிரசவத்திற்கு பிறகு மூச்சு விட முடியாமல் தவித்த குழந்தைக்கு 2 மணி நேரம் சிபிஆர் கொடுத்து அந்த குழந்தையின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். இந்த தகவலை அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், செவிலியர் கண்ணனை நேரில் அழைத்து ‘35 ஆயிரம் அடி உயரத்தில், ஒரு இக்கட்டான சூழ்நிலையில், இரண்டு உயிர்களை காப்பாற்றி, தமிழர்கள் எந்த இடத்திலும் பிரதிபலன் பாராது உதவி செய்ய கூடியவர்கள் என்பதை செயல் மூலம் நிரூபித்து காட்டியுள்ளீர்கள்,’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சுயமரியாதை இயக்கத்தால் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு
00:43
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img