‘கங்குவா’ சப்ரைஸ் பற்றி சொன்ன – சிறுத்தை சிவா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

‘கங்குவா’ சப்ரைஸ் பற்றி சொன்ன - சிறுத்தை சிவா! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் சிறுத்தை சிவா, சிறுத்தை, வேதாளம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அடுத்தது இவர் சூர்யாவுடன் கைகோர்த்து கங்குவா எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படமானது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது.

எனவே ரசிகர்கள் பலரும் படத்தினை திரையரங்குகளில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதேசமயம் படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேன்மேலும் தூண்டி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் கார்த்தி இணைந்துள்ளதாகவும் கார்த்திதான் சூர்யாவிற்கு வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா, இந்த படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், “கங்குவா படத்தின் கதையை சீன் பை சீனாக சொல்லும் போது அவரது முகத்தில் உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இன்டர்வெல் சீன் முடித்த பிறகு இதுவரை இந்த மாதிரி விஷயங்களை பார்க்கவில்லை சிவா என்று சொன்னார் சூர்யா. சூர்யா சாருக்கு இது ரொம்ப பிடித்து விட்டது என்று எனக்கு அப்போதே தெரிந்து விட்டது. படத்தின் பூஜை போட்டதிலிருந்து இப்போது படத்தின் பைனல் காப்பியை பார்த்த பிறகு சூர்யா சார் எங்கள் குழுவின் மீது வைத்திருந்த நம்பிக்கை பல மடங்கு அதிகமாகிவிட்டது. அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

Video thumbnail
பிஜேபி கூட்டணியால் திமுகவை வெற்றி பெற முடியுமா?
01:16
Video thumbnail
புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?
00:50
Video thumbnail
திமுகவை குறிவைக்கும் அமலாக்கத்துறை
01:29
Video thumbnail
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் திட்டம்
00:44
Video thumbnail
SIR திருத்தம், இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி
01:14
Video thumbnail
SIR திருத்தம் இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி | வேல்முருகன் பேட்டி
06:46
Video thumbnail
இரண்டாவது இடதுக்கு தான், அதிமுக - தவெக இடையே போட்டி
01:14
Video thumbnail
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் கட்சி திமுக
01:14
Video thumbnail
விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
01:07
Video thumbnail
2026 தமிழ்நாடு தேர்தல் மிக மிக முக்கியமானது | விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
16:39
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img