செய்திகள்

வெற்றிகரமான 25வது நாள் ‘மெய்யழகன்’!

கார்த்தி, அரவிந்த்சாமியின் மெய்யழகன் திரைப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. கார்த்தி நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். எமோஷனல் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியிருந்த இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது.

96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைக்க மகேந்திரன் ராஜு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு இருந்தார்.வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்தது. இருப்பினும் படத்தின் நீளம் சற்று சலிப்பை தருவதாக சொல்லப்பட்டிருந்த நிலையில் 18 நிமிட 42 வினாடிகள் கொண்ட காட்சிகளை நீக்கி 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த அளவிற்கு கார்த்தியும், அரவிந்த்சாமியும் தனது நடிப்பினால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் இன்றுடன் (அக்டோபர் 21) 25 நாட்களை எட்டியுள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

Newsdesk

Share
Published by
Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி