வெற்றிகரமான 25வது நாள் ‘மெய்யழகன்’!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வெற்றிகரமான 25வது நாள் ‘மெய்யழகன்’! கார்த்தி, அரவிந்த்சாமியின் மெய்யழகன் திரைப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. கார்த்தி நடிப்பில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். எமோஷனல் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியிருந்த இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது.

96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைக்க மகேந்திரன் ராஜு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு இருந்தார்.வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்தது. இருப்பினும் படத்தின் நீளம் சற்று சலிப்பை தருவதாக சொல்லப்பட்டிருந்த நிலையில் 18 நிமிட 42 வினாடிகள் கொண்ட காட்சிகளை நீக்கி 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த அளவிற்கு கார்த்தியும், அரவிந்த்சாமியும் தனது நடிப்பினால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் இன்றுடன் (அக்டோபர் 21) 25 நாட்களை எட்டியுள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
Video thumbnail
பாஜகவுக்கு, திமுக மீது ஏன் அவ்வளவு வன்மம்
00:54
Video thumbnail
2026 தேர்தலில் புதிய கூட்டணி | விஜய் - சீமான் - அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு?
00:46
Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
Video thumbnail
அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்
00:56
Video thumbnail
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் பங்கேற்கவில்லை
00:34
Video thumbnail
மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
00:43
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி
00:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img