spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘சூர்யா 44’ படப்பிடிப்பு நிறைவு புகைப்படங்கள் வைரல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

‘சூர்யா 44’ படப்பிடிப்பு நிறைவு புகைப்படங்கள் வைரல்!சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகப்பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது

அடுத்தது நடிகர் சூர்யா தனது 44 வது திரைப்படத்தில் நடிக்கிறார். சூர்யா 44 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும் இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட அந்தமான், ஊட்டி, கேரளா, சென்னை போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் சூர்யாவும் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img