spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘கங்குவா’ ப்ரோமோஷனில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சூர்யா!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 கங்குவா படத்தில் ப்ரொமோஷன் பணிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.சூர்யாவின் 42வது படமாக உருவாக இருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

 

3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் பாபி தியோல் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அடுத்தது இரண்டு பாகங்களாக வெளியாகும் கங்குவா முதல் பாகத்தில் கிளைமாக்ஸில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக கார்த்தியின் காட்சிகள் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

‘கங்குவா’ ப்ரோமோஷனில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சூர்யா!

அதுமட்டுமில்லாமல் கங்குவா 2 திரைப்படம் முழுவதும் வில்லனாக நடித்திருக்கும் கார்த்திக்கும் – சூர்யாக்கும் இடையிலான காட்சிகள் தான் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிக பிரம்மாண்டமாகவும் உருவாகி இருக்கும் இந்த படத்தினை காண ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா ஆகிய படக்குழுவினர் மும்பையில் நடைபெறும் கங்குவா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது நடிகர் சூர்யா ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img