சூர்யா நடிப்பில் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதே சமயம் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கேங்ஸ்டர் தொடர்பான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அந்தமான், ஊட்டி, கேரளா, சென்னை போன்ற பகுதிகளில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சூர்யா தனது போர்ஷனை நிறைவு செய்ததாக அறிவித்திருந்தார். இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, தனது 45வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசை அமைக்க இருக்கிறார்.
யாரும் எதிர்பாராத காம்போவில் உருவாகும் இந்த படம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் (அக்டோபர் 14) இன்று மாலை 6:00 மணி அளவில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகையினால் இந்த அறிவிப்பு சூர்யா 45 படம் தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.