பாலத்தில் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் இல்லை என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பாலத்தில்  நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் இல்லை என  தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாலங்கள் மீது நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு, தாம்பரம் மாநகர காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்த நேற்று வேளச்சேரி மேம்பாலத்தில் ஏராளமானோர் தங்களது கார்களை நிறுத்தி வைத்தனர். இதேபோல் மேடவாக்கத்தில் உள்ள மேம்பாலத்திலும் ஏராளமானோர் தங்களது கார்களை நிறுத்தினர்.

இந்நிலையில், பாலத்தின் மீது போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியதாக கூறி போக்குவரத்து துறையினர் அபாரதம் விதித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த எவ்வித தடையும் இல்லை, அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- பாலங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக வதந்தி பரவி வருகிறது. அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அத்தகைய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. தாம்பரம் மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், வசதிக்காக தாம்பரம் நகர போலீசார் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சவாலான வானிலையின்போது வாகனங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய, குடிமக்களுக்கு எங்கள் காவல் கட்டுப்பாட்டு அறை உதவும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியே எங்களின் முதன்மையான முன்னுரிமைகள் மற்றும் தேவையான ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பொதுமக்களுக்கு எதேனும் உதவி தேவைபட்டால் +9194981 81500 என்ற எண்ணை தொடர்பு கொள்ள தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளப்படுகின்றனர், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Video thumbnail
அதிமுக கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றுதான்
00:57
Video thumbnail
திருமாவளவன் பிறந்த நாள் | ராப் இசைப் பாடகர் வேடனுக்கு அழைப்பு
01:01
Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img