தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் கொலைகள் நடக்கின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில், 8,860க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக வெளியான புள்ளிவிவரம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர்.
குடும்ப வன்முறை, தகாத உறவு, காதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொலைகள் நடந்திருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். இதில் குழு மோதல், அரசியல் காரணங்கள், முன்விரோதம் & பழிவாங்கல் முயற்சியில் 244 ரவுடிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள ரவுடிகளை, உளவு போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீசாரும், ரவுடிகள் ஒழிப்பு போலீசாரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.