தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பேர் பயணம்.

மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பேர் பயணம்.

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 92 லட்சத்து, 77 ஆயிரத்து 697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி அன்று 3 லட்சத்து, 74 ஆயிரத்து 87 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.மேலும், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86.15 லட்சம் பயணிகளும், மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

 

இதேபோல், ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகளும், மே மாதத்தில் 84.21 லட்சம் பயணிகளும், ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகளும் பயணித்துள்ளனர். ஜூலை மாதத்தில் 95.35 லட்சம் பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 30.99 லட்சம் பயணிகளும், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40.73 லட்சம் பயணிகளும் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 20.90 லட்சம் பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி