சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் – தாமதமாக இன்று மாலை செல்லும்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னையில் இருந்து 172 பேருடன், டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் ஓடும் போது திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது இதையடுத்து விமானி அவசரமாக விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தினார். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, எடுத்த துரித நடவடிக்கையால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, 172 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

  சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு, டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள், 172 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.

இதை அடுத்து ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானத்தை, இழுவை வண்டிகள் மூலமாக விமானம் நிற்க வேண்டிய இடத்திற்கு, இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதோடு விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக முயற்சி செய்தும் விமானத்தை சரிபார்க்க முடியவில்லை. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் -  தாமதமாக இன்று மாலை செல்லும்.

இதை அடுத்து பயணிகள் 164 பேரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு உணவு போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விமானம் பழுதுபார்க்கப்பட்டு இன்று மாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய, 164 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

டொனால்ட் டிரம்ப் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள்

இதற்கிடையே விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, உடனடியாக எடுத்த நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்தில் இருந்து தப்பித்து, விமானத்திலிருந்து 164 பயணிகள் உட்பட 172 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானம் மீண்டும் 7 மணி நேரம் தாமதமாக, இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img