தமிழ்நாடு

சேலத்தில் மாம்பழ வரத்து குறைந்ததால், வெறிச்சோடிய குடோன்கள்

சேலத்தில் மாம்பழ வரத்து குறைந்ததால் வெறிச்சோடிய குடோன்கள்
சேலத்தில் மாம்பழ வரத்து குறைந்துள்ளதால் அங்குள்ள குடோன்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது. சேலத்தில் விளையும் மல்கோவா மாம்பழம் மிகுந்த சுவை மிகுந்தது.

அது மட்டும் இன்றி சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரா, நடுசாளை, குண்டு, இமாம்பசந்த், நீலம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜனவரி மாதத்தில் மழை இல்லாத வறண்ட வானிலை கடந்த இரண்டு மாதங்களாக நீடிக்கும் கடும் வெயில் காரணமாக மாப்பிஞ்சுகள் காய்ந்து உதிர்ந்து விட்டன. இதனாலும் பூச்சி தாக்குதல் மற்றும் பருவம் தவறிய மழையால் மாவிளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து அடித்த செலவுக்கு கூட மாம்பழ விளைச்சல் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நல்ல வரவேற்பு இருந்தும் போதிய மாம்பழங்கள் வரத்து இல்லாததால் வியாபாரம் முடங்கி உள்ளதாக வியாபாரிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

குவியல் குவியல்களாக கொட்டி கிடந்த நிலை மாறி மாம்பழ வரத்து இல்லாததால் மாம்பழங்கள் இல்லாமல் குடோன்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

https://www.mugavari.in/news/tamilnadu-news/punishing-children-in-schools-should-be-prevented/2027

பொதுவாக இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் 50 சதவீதத்திற்கும் மேல் சரிந்ததால் விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் கவலையடைந்துள்ளனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி