ஜனவரி  முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை  – அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அருப்புக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த பின் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பேச்சு.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் ஜனவரி முதல் உரிமைத் தொகை - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அதன்படி கஞ்சநாயக்கன்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 17 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தையும், சுக்கில நத்தம் கிராமத்தில் ரூ 13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் ரூ 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள நியாய விலை கட்டிடத்திற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மீனாட்சிபுரம் மற்றும் ஆமணக்கு நத்தம் கிராமத்தில் தலா ரூ 8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கும்,  ரூ 21 லட்சம் மதிப்பில் புதிதாக பைப் லைன் அமைக்கும் பணிகளுக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து குருந்த மடம் கிராமத்தில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கதொட்டியையும், ரூ 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌, உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு.‌ உங்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோசம் என்னை பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம்.‌ கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது.‌ வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதேபோல முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.‌ எனக்கு ஆயுள் உள்ளவரை உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்.‌ கடவுள் என்னை எத்தனை நாட்களுக்கு ஓட விடுகிறாரோ அத்தனை நாட்களும் உங்களுக்காக நான் ஓடிக்கொண்டே இருப்பேன் என பேசினார்.

நக்கீரன் கோபாலுக்கு எதிராக பேசிய ஓம்கர் பாலாஜி வழக்கை ஒத்தி வைத்தார் – நீதிபதி ஜெகதீஸ் சந்திரா

Video thumbnail
பொங்கலுக்குள் மாதவரம் ஏரியில் பொதுமக்களுக்கு படகு சவாரி - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
01:20
Video thumbnail
சாலையில் சென்ற பெண் மீது மோதிய ஆட்டோ | சிசிடிவி காட்சி
00:27
Video thumbnail
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
01:37
Video thumbnail
'அரசன்' திரைப்பட படப்பிடிப்புக்கு இடையே மதுரையில் ரசிகர் சந்திப்பு நடத்திய நடிகர் சிம்பு
00:44
Video thumbnail
குழந்தைகளுக்கு கேக் வெட்டி கொடுத்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய தவெக தலைவர் விஜய்
01:11
Video thumbnail
கண்டிப்பா ஒரு ஒளி பிறக்கும்.. அந்த ஒளி நம்மை வழிநடத்தும் | கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேச்சு
06:09
Video thumbnail
தேர்தல் என்பது ஒரு நாள் வரும் திருவிழா அல்ல… – திமுக எம்.பி திருச்சி சிவா
01:47
Video thumbnail
தவெக சார்பில் நடக்கும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை துவக்கி வைத்த விஜய்
00:48
Video thumbnail
அதிமுக பாஜக கூட்டணியில் தவெக கட்சி இணைந்தால் எப்படி இருக்கும்?
01:26
Video thumbnail
தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
01:16
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img