வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெருகிறது நவ.16 மற்றும் நவ.17 ம் இரண்டு நாட்கள் நடத்தப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), மற்றும் நாளை மறுநாள் (நவ.17) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தவிர, https://voters.eci.gov.in இணையதளத்திலும், VOTER HELP LINE என்ற மொபைல் போன் செயலி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.