கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தினை குரங்கு பொம்மை படத்தின் மூலம் பிரபலமான நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அஜனீஸ் லோக்நாத் இதற்கு இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
ஹீரோவை விட திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருந்தார் நித்திலன். எனவே திரை பிரபலங்கள் பலரும் மகாராஜா திரைப்படத்தையும் இயக்குனர் நித்திலன் சாமிநாதனையும் பாராட்டி வருகின்றனர். அடுத்ததாக இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி மகுடம் சூடியது மகாராஜா.
இந்நிலையில் இந்த படத்தின் 100வது நாள் வெற்றியை படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடியுள்ளனர். அப்போது இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு மகாராஜா படத்தின் தயாரிப்பாளர் சதீஷ், ஜெகதீஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தினை நித்திலன் சாமிநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.