திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிகழ்சியில் தலைமை உரையாற்றிய துணை முதலமைச்சா் உதயநிரி ஸ்டாலின், போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து பரிசுகளையம் வழங்கினாா். மேலும் இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடரவேண்டும் . தமிழ்நாடு முழுக்க அனைத்து தொகுதிகளிலும் நூலகங்கள் தொடங்கப்படும் .
இதுவரை 75 தொகுதிகளில் தமிழ்நாடு முழுக்க கலைஞர் நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளது, இன்னும் 3 மாதங்களில் அனைத்து தொகுதிகளிலும் நூலகங்கள் தொடங்கப்படும். திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கை உங்கள் பேச்சுக்களை கேட்ட பொழுது நம்பிக்கை வந்தது. தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் பேர் இந்த போட்டிக்கு விண்ணப்பித்த நிலையில்,முதற்கட்டமாக 913 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர்கள் அவர்களாகவே முன்வந்து 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி உள்ளனர்.
நடுவானில் பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டு – அமைச்சர் சா.மு.நாசர்
இளைஞர் அணி தாயக திகழும் திராவிட நாயகன் இறுதி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார். இந்த போட்டியில் சிறப்பு என்னவென்றால் ஆண்களை விட பெண்களே அதிகம் பங்கேற்றனர். அதற்கு அவர்களின் பெற்றோருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், எங்களை நம்பி அவர்களை அழைத்து வந்ததற்கு. இந்த ஆண்டு பேச்சு போட்டி வெற்றி பெற்றதை அடுத்து இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் பிறந்தநாளில் பேச்சு போட்டி நடத்த தலைவர் அனுமதி வழங்க வேண்டும். தொடர்ந்து இவர்கள் பேச மாவட்ட கழக செயலாளர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும். நீங்கள் அனைவரும் எங்களுடன் தான் இனி பயணிக்க போகிறீர்கள்.