தொடர் ஏற்றத்தில் கச்சா எண்ணெய் விலை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

சர்வதேச அளவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

காவல்துறை அதிகாரியிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் துரைமுருகன்!

பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 1.2% அதிகரித்து 86.48 டாலரில் வர்த்தகமாகியது. WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 1.4% அதிகரித்து 81.78 டாலரில் வர்த்தகமாகியது. நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திலேயே உள்ள நிலையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் 11%- ம், WTI கச்சா எண்ணெய் 12.5%- ம் உயர்ந்துள்ளது.

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் நீடிப்பு, எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் உற்பத்தி தொடர்பாக விதிக்கும் கட்டுப்பாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் போன்றவையே கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க காரணமாகக் கூறப்படுகிறது.

பங்குனி உத்திர விழா திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கோலாகலம்!

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக கச்சா எண்ணெய் விலையும் இருப்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img