spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சீனாவில் அந்தரத்தில் தொங்கிய குழந்தைகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சீனாவில் அந்தரத்தில் தொங்கிய குழந்தைகளை தீயணைப்பு  துறையினர் மீட்டனர்.சீனாவில் பெற்றோர்கள் பிரச்சனையில் குழந்தைகள் அந்தரத்தில் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 23வது மாடியில் வசித்து வந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை வெளிப்புற ஏசி யூனிட்டில் உட்கார வைத்து விட்டு அவரது கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தின் லுயோயாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அக்டோபர் 10ம் தேதி குழந்தைகளின் அழுகை சத்தம் பக்கத்து வீட்டுகார்களுக்கு கேட்டு உள்ளது.
ஒரு பெண் குடியிருப்பு கட்டிடத்தின் 23வது மாடியிலிருந்த வெளிப்புற ஏசி யூனிட்டில் தனது 2 குழந்தைகளை (ஆண் 1, பெண் 1) அமர வைத்து கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்த்துள்ளனர். அதனை அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

மேலும் இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததாகவும், குழந்தைகளின் தாய் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு, கணவன் குழந்தைகளை நெருங்க விடாமல் தடுத்துள்ளார். மேலும் கணவன் – மனைவி இடையே சண்டைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என அருகில் வசிக்கும் வீட்டுகாரர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னர் தீயணைக்கும் வாகனம் வந்து குழந்தைகளை மீட்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img