ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு – இந்தியர்கள் மூன்று பேர் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு – இந்தியர்கள் மூன்று பேர் கைது

சீக்கிய பிரிவினைவாதியும் காலிஸ்தான் அமைப்பின் முக்கிய தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியர்கள் மூன்று பேரை கனடா காவல்துறை கைது செய்துள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு - இந்தியர்கள் மூன்று பேர் கைது

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் வான்கூவரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதை எடுத்து நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை குறித்து தீவிரமாக விசாரித்து வந்த கனடா காவல்துறையினர் 3 இந்தியர்களை கைது செய்துள்ளனர்.

இதற்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த விவகாரம் இந்தியா கனடா இடையேயான உறவில் வெரிசலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை குறித்து தீவிரமாக விசாரித்து வந்த கனடா காவல்துறையினர் 3 இந்தியர்களை கைது செய்துள்ளனர்.

கரன்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங், கரன் பிரார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை குறித்தும் அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கனடா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img