மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் சிறப்புக் கண்காணிப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் தம்புராஜ்.
ஆய்வு முடிந்து காரில் புறப்பட்ட நிலையில், அங்கு வந்த முதியவர் ஒருவர் பேச முன்வந்தபோது, தனது காரை நிதானமாக நிறுத்தி பெரியவரின் குறைகளைக் கேட்ட IAS அவா்களின் அணுகுமுறையால் உணர்ச்சிவசப்பட்ட முதியவர், “நீங்க நல்லா இருப்பீங்க.. டாப்ல வருவீங்க..” – அருண் தம்புராஜ் IAS-ஐ அதிகாரியை அங்கேயே அவரைப் பாராட்டினார்.