spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ராஜஸ்தான் அணியின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா – இன்று பலப்பரீட்சை!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 31வது லீக் போட்டியில் கொல்கத்தாvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 30 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 31வது லீக் போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 31வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வியுடன் (சென்னைக்கு எதிராக) புள்ளிப்பட்டியலில் 2வது உள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5 வெற்றி ஒரு தோல்வியுடன் (குஜராத்துக்கு எதிராக) புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 14 முறையும் ராஜஸ்தான் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இரு அணிகளும் போராடும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

Video thumbnail
திமுக கூட்டணியில் ஓபிஎஸ்? | ஸ்டாலினை கோபப்படுத்திய ராகுல் காந்தி |DMK | MKStalin | OPS | RahulGandhi
12:27
Video thumbnail
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
01:18
Video thumbnail
இன்று (பிப் 21) "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு" என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு
01:34
Video thumbnail
தவெக கூட்டணியில் இணையும் புதிய கட்சி? முக்கிய தகவலை பகிர்ந்த செங்கோட்டையன்
00:52
Video thumbnail
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
01:09
Video thumbnail
எங்கிருந்தாலும் வாழ்க.. திமுக-தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்
00:55
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை திரிஷா
00:58
Video thumbnail
சென்னையில், கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த தனுஷ்..
01:48
Video thumbnail
கலைஞர் விரும்பிய கூட்டணியை அமைத்திருக்கிறோம்..
01:40
Video thumbnail
துண்டு சீட்டு இல்லாமல் 10 தொண்டர்களின் பெயர் சொல்ல முடியுமா?
01:58
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img