பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 57 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 58வது லீக் போட்டி நடைபெறுகிறது. தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 58வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 வெற்றி 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும் பெங்களூரு அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி இப்போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதே சமயம் பெங்களூரு அணி தனது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும் பாப் டூ பிளசிஸ்சும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
Video thumbnail
அதிமுக பாஜக கூட்டணியில், தவெக இணைத்தால்?
01:09
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு
01:14
Video thumbnail
உலகத்திற்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜாளி கழுகு | மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் | Eagle
07:22
Video thumbnail
தவெக 23 சதவீதம்.. திமுக 45 சதவீதம்.. புதிய கருத்து கணிப்பு..
01:14
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img