spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 30 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 31வது லீக் போட்டி நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 31வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 10 ரன்னிலும் சுனில் நரேன் அபாரமாக விளையாடி சதம் விளாசி 109 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி 30 ரன்னிலும் ஸ்ரேயர்ஸ் அய்யர் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அணியை 200 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது.

பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யாஷ்வி ஜெய்ஸ்வால் 19 ரன்னிலும் ஜாஸ் பட்லர் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய சாம்சன் 12 ரன்னிலும் ரியான் பராக் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது ஜாஸ் பட்லர் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த அவர் கடைசில் பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது  தடுப்பாட்டம் ஆடி ஒரு ரன் எடுத்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 224 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அணியின் ஆட்டநாயகன் விருது சதம் விளாசிய ஜாஸ் பட்லருக்கு வழங்கப்பட்டது.

Video thumbnail
திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்கு செலுத்திய புதுமண தம்பதி
01:15
Video thumbnail
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையாற்றிய சூர்யா, ஜோதிகா
01:15
Video thumbnail
சென்னை வளசரவாக்கத்தில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்த நடிகர் யோகிபாபு
01:32
Video thumbnail
சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார் விஜய்
01:00
Video thumbnail
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மிடில் ஸ்கூலில் வாக்களித்தார் நடிகை த்ரிஷா
01:11
Video thumbnail
திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய நடிகர் அஜித்
00:39
Video thumbnail
திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.. - சண்முகம்
01:35
Video thumbnail
தனது வாக்கினை பதிவு செய்தார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்..
00:53
Video thumbnail
"நாளை ஒருநாள் நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் இந்த ஒரு விரல் தான்" - நடிகை வரலட்சுமி சரத்குமார்
00:25
Video thumbnail
சிங்கப்பூர் To திருச்சிக்கு வரும் பயணிகளிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறும் விமானி
00:23
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img