spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு

உண்மைக்கு புறம்பான தகவல்களை தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவை சேர்ந்த மத்திய சென்னை வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது தன் மீது உண்மைக்கு புறம்பாக அவதூறாக பேசி இருப்பதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி மீது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

எழும்பூர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்கு புறம்பாக நான் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என்பது பொய்யான தகவல் என்று தெரிந்தே தன் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதாக கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு

எனவே, இதுகுறித்து 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தேன். ஆனால் 24 மணி நேரமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கினை பதிவு செய்திருப்பதாகவும், இந்த வழக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொகுதி நிதியில் ரூபாய் 17 கோடியில் 17 லட்சம் ரூபாய் தான் மீதம் இருப்பதாகவும், தொகுதி நிதியை மத்திய சென்னைக்காக செலவழித்துள்ளதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தோல்வி விரக்தியில் பேசி வருகிறார். அவர் பேசுவது அவருக்கே தெரிகிறதா என்று தெரியவில்லை. ஏதோ வந்தோம் பேசினோம் என்று திமுகவினரை தாக்கினோம் என்று பேசி இருக்கிறார்.உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். என் தொகுதிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறேன்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/today-spcial-bus/1252

செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேடு ஆர்.டி.ஐ மூலமாக அந்த செய்தியை பெற்றதாகவும் இதற்கு மறுப்பும் தெரிவித்து இருக்கிறது. இதே போலவே ஆர்டிஐ யில் வந்த தவறான செய்தியை அண்ணாமலையும் செய்தார். ஆர்.டி.ஐ முறை பாஜக ஆட்சியில் எப்படி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிகிறது என்றார்.

Video thumbnail
நாயகியாக என்னோட முதல் படமான மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகுது -வீடியோ வெளியிட்டு நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி
01:44
Video thumbnail
வெல்லப்போவது தமிழ்நாடு அணியா?, டெல்லி அணியா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் | MK Stalin | DMK
01:37
Video thumbnail
பாஜகவின் டப்பா எஞ்சினுக்கு முன் தமிழ்நாட்டின் சூப்பர் பாஸ்ட் எஞ்சின் என்றும் தலைகுனியாது - MK Stalin
01:23
Video thumbnail
இந்தியாவின் முதல் 'மெல்லிசை சாலை' மும்பையில் திறக்கப்பட்டுள்ளது
00:35
Video thumbnail
திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டு மேடைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை!
00:58
Video thumbnail
பிரபல நடிகை ஸ்ரீலீலா எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார்
00:29
Video thumbnail
ஆட்சியில் பங்கு? தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! கூட்டணியில் சதி? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:58
Video thumbnail
சேலத்தில் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சிறப்பு பூஜை செய்த த.வெ.க.வினர்
00:58
Video thumbnail
மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் - வீடியோ வெளியிட்டு நடிகை லைலா நெகிழ்ச்சி!
00:58
Video thumbnail
டார்ச்சர் - பா.ஜ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி; ஆடியோ வைரல்
02:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img