spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சுறாவளியாய் சுழன்று அடித்த சூர்யகுமார் யாதவ் – பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 32 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 33வது லீக் போட்டி நடைபெற்றது. முல்லாப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 33வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 8 ரன்னிலும் ரோகித் சர்மா 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 34 ரன்களிலும் டிம் டேவிட் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரண் 8 ரன்னிலும் பிரப்சிம்ரன் சிங் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரில்லி ரூசோ பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். தற்போது வரை பஞ்சாப் அணியானது 2 ஓவர்கள் முடிவில் 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழந்து திணறி வருகிறது.

Video thumbnail
காணாமல் போன 5 வயது சிறுமி.. சில நிமிடங்களில் மீட்ட RPF பெண் காவலர்..
00:38
Video thumbnail
ரூ.10 கூடுதலுக்கு வாக்குவாதம்.. டாஸ்மாக் பணியாளரை செருப்பால் அடித்த மதுப்பிரியர்..
00:52
Video thumbnail
தனது மேலாளர் ஜெகதீஷ் இல்ல விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் விஜய்
00:31
Video thumbnail
"விஜய் 100% நல்லது செய்வார்!" - நடிகர் அர்ஜுன் நம்பிக்கை!
00:54
Video thumbnail
சனாதனம் குறித்த கேள்வி.. நடிகர் அர்ஜுன் சொன்ன விளக்கம்..
01:01
Video thumbnail
மாற்றம் வேண்டி மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் - நடிகர் சிவக்குமார்
02:40
Video thumbnail
MLA-களின் பெயரை வைத்து மக்கள் வாக்களிக்கவில்லை; சின்னத்திற்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள்
00:58
Video thumbnail
டெல்லி பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய் #Vijay #CMVijay #Delhi #Tamilnadu
01:40
Video thumbnail
நீங்க தூயசக்தியா விஜய்! பித்தலாட்ட சக்தி - டி.டி.வி.தினகரன்
02:26
Video thumbnail
ரீல்ஸ் மூலம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு.. அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோ வைரல்..
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img