spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அஷிதோஷ் சர்மாவின் அதிரடி வீண் – மும்பை அணி திரில் வெற்றி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 32 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 33வது லீக் போட்டி நடைபெற்றது. முல்லாப்பூரில் உள்ள மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 33வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 8 ரன்னிலும் ரோகித் சர்மா 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 34 ரன்களிலும் டிம் டேவிட் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 192 ரன்கள் குவித்தது.

பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாம் கரண் 8 ரன்னிலும் பிரப்சிம்ரன் சிங் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரில்லி ரூசோ பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்க்ஸ்டன் 1 ரன்னிலும் ஹர்பிரித் சிங் பாட்டியா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய அஷிதோஷ் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றியை பெற்றது. ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்டுகள் கைப்பற்றி ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img