spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தொடர் தோல்வியிலிருந்து விடுபடுமா பெங்களூரு அணி – கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 36வது லீக் போட்டியில் கொல்கத்தாvsபெங்களூரு அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 36வது லீக் போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 36வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 வெற்றி 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலுள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 1 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 19 முறையும் பெங்களூரு அணி 14 முறையும் முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்த பெங்களூரு அணி இந்த போட்டிகளில் எழுச்சி பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரம் கடந்த போட்டியில் தோல்வியடைந்த கொல்கத்தா அணி இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img