spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் போராடி தோற்றது பெங்களூரு அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 36வது லீக் போட்டி நடைபெற்றது. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 36வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுனில் நரேன் 10 ரன்னிலும் பில் சால்ட் 48 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி 3 ரன்னிலும் ஸ்ரேயர்ஸ் அய்யர் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ரமன்தீப் சிங் 9 பந்தில் 24 ரன்கள் எடுத்து அணியை 200 ரன்களை கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 222 ரன்கள் குவித்தது.

பின்னர் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 18 ரன்னிலும் பாப் டூ பிளசிஸ் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வில் ஜாக் 55 ரன்னிலும் ரஜத் படிதார் 52 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய 7 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்து 1 ரன்கள் வித்தியாசத்தில் நூலிழையில் கோட்டை விட்டது.

Video thumbnail
பெண்கள் என்றாலே அழகுதான்; ஆனால், அறிவுதான் உண்மையான அழகு
01:28
Video thumbnail
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் கல்லூரி சேர்க்கை 34% உயர்ந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:32
Video thumbnail
ரசிகர்களைக் கண்டித்த அஜித்.. Please Behave Yourself...
00:20
Video thumbnail
விஜய், அவர் வந்தே ஆகணும்; மக்கள் நினைச்சா விஜய் கண்டிப்பா வந்துடுவார் - சிவகுமார்
01:20
Video thumbnail
கோட்டை முதல் குமரி வரை தேமுதிக யாருடன் கூட்டணி என்பதுதான் பேசுபொருள்.. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
01:21
Video thumbnail
ரீ-ரிலீஸ் ஆகும் மௌனம் பேசியதே | சூர்யா வெளியிட்ட வீடியோ
01:15
Video thumbnail
டாடா கார் தொழிற்சாலை - முதல்வர் திறந்துவைத்தார்
00:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார்
00:58
Video thumbnail
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:49
Video thumbnail
திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த SelfieVideo
00:33
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img