spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் அணி அபாரம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்றிரவு நடைபெற்ற 37வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முல்லாப்பூரில் உள்ள மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 37வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக குஜராத் அணி முதலாவது பந்துவீசியது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாம் கரண் 20 ரன்னிலும் பிரப்சிம்ரன் சிங் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரில்லி ருசோ 9 ரன்னிலும் ஜிதேஷ் சர்மா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் குஜராத் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது.

 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விருத்திமான் சஹா 13 ரன்னிலும் சுப்மான் கில் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் சாய் சுதர்சன் 31 ரன்னிலும் டேவிட் மில்லர் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய ராகுல் திவேதியா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு வித்திட்டார். இறுதியில் அணியானது 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

 

 

Video thumbnail
நடிகர் தனுஷுக்கு வெற்றி வேல் கொடுத்து உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்..
00:37
Video thumbnail
விஜய் வெற்றி பெறுவாரா?
01:11
Video thumbnail
மே 4-க்கு பிறகு தவெக தொண்டர்களின் மனநிலை..
01:29
Video thumbnail
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு..
01:08
Video thumbnail
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு | மே 4-க்கு பிறகு தவெக தொண்டர்களின் மனநிலை | TVK | Vijay | Election
13:32
Video thumbnail
திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்கு செலுத்திய புதுமண தம்பதி
01:15
Video thumbnail
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையாற்றிய சூர்யா, ஜோதிகா
01:15
Video thumbnail
சென்னை வளசரவாக்கத்தில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்த நடிகர் யோகிபாபு
01:32
Video thumbnail
சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார் விஜய்
01:00
Video thumbnail
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மிடில் ஸ்கூலில் வாக்களித்தார் நடிகை த்ரிஷா
01:11
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img