spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஜெய்ஸ்வாலின் அபார சதத்தால்…. ராஜஸ்தான் அணி எளிதில் வெற்றி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்றிரவு நடைபெற்ற 38வது லீக் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 37 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 38வது லீக் போட்டி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 38வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணி பந்துவீசியது,. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் ரன் ஏதுமின்றியும் ரோகித் சர்மா 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன்னிலும் திலக் வர்மா 65 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய நெஹால் வதேரா 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 179 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சு தரப்பில் சந்தீப் சர்மா 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லரும் 35 ரன்னில் ஆட்டமிழக்க யாஷ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 38 ரன்கள் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 18.4 ஓவர்கள் 1 விக்கெட்டு இழந்து 183 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது 5 விக்கெட்டுகள் எடுத்த சந்தீப் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

Video thumbnail
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் கல்லூரி சேர்க்கை 34% உயர்ந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:32
Video thumbnail
ரசிகர்களைக் கண்டித்த அஜித்.. Please Behave Yourself...
00:20
Video thumbnail
விஜய், அவர் வந்தே ஆகணும்; மக்கள் நினைச்சா விஜய் கண்டிப்பா வந்துடுவார் - சிவகுமார்
01:20
Video thumbnail
கோட்டை முதல் குமரி வரை தேமுதிக யாருடன் கூட்டணி என்பதுதான் பேசுபொருள்.. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
01:21
Video thumbnail
ரீ-ரிலீஸ் ஆகும் மௌனம் பேசியதே | சூர்யா வெளியிட்ட வீடியோ
01:15
Video thumbnail
டாடா கார் தொழிற்சாலை - முதல்வர் திறந்துவைத்தார்
00:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார்
00:58
Video thumbnail
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:49
Video thumbnail
திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த SelfieVideo
00:33
Video thumbnail
வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை; நகராமல் அங்கேயே நின்ற தாய் யானை
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img