spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ருத்ராஜ், சிவம் துபே அதிரடி ஆட்டம் – லக்னோ அணிக்கு 211 ரன்கள் இலக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 210 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 38 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 39வது லீக் போட்டி நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 39வது லீக் போட்டியில் ரூத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 3 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் 11 ரன்னிலும் ரவீந்திர ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 210 ரன்கள் குவித்தது. பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டிகாக்கும் கேஎல் ராகுலும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்த சாதனை
01:08
Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
Video thumbnail
"ஜோசியரை பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
01:38
Video thumbnail
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
01:35
Video thumbnail
முதலமைச்சர் விஜய்க்கு சௌமியா அன்புமணி வாழ்த்து..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img