spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம் – குஜராத் அணிக்கு 225 ரன்கள் இலக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 224 ரன்கள் குவித்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 39 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று 40வது லீக் போட்டி நடைபெற்றது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 40வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 11 ரன்னிலும் ஜாக் பிராஸர் மெகர்க் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல் 66 ரன்னிலும் சாய் ஹோப் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்து அணியை 200 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 224 ரன்கள் குவித்தது. பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.

Video thumbnail
2 சிறுநீரகங்கள் தானம் | உடல் உறுப்பு கொடையாளிக்கு அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி.
01:15
Video thumbnail
புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா | மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் கோலாகலம்.
02:05
Video thumbnail
திருமணம் குறித்த மகள் திவ்யாவின் பேச்சுக்கு ஆதரவு குரல் கொடுத்த சத்யராஜ்
01:23
Video thumbnail
தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் - டிரோன் காட்சிகள்
01:12
Video thumbnail
நடிகர் தனுஷுக்கு வெற்றி வேல் கொடுத்து உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்..
00:37
Video thumbnail
விஜய் வெற்றி பெறுவாரா?
01:11
Video thumbnail
மே 4-க்கு பிறகு தவெக தொண்டர்களின் மனநிலை..
01:29
Video thumbnail
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு..
01:08
Video thumbnail
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு | மே 4-க்கு பிறகு தவெக தொண்டர்களின் மனநிலை | TVK | Vijay | Election
13:32
Video thumbnail
திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்கு செலுத்திய புதுமண தம்பதி
01:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img