spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மக்களவை தேர்தல் – நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மக்களவை தேர்தல் – நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் நாளை 2 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

ஓம் பிர்லா, ராகுல் காந்தி, சசிதரூர், நடிகை ஹேமமாலினி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாளை 89 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு18 ஆவது மக்களவைக்கான தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102  தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் சுமார் 62% வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை நடைபெற இருக்கிறது.

நாளை 89 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவுஇதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகள், கர்நாடகத்தில் 14, ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.அத்துடன் உத்தரப் பிரதேசம், மராட்டியத்தில் தலா 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகள், அசாம் மற்றும் பீகாரில் தலா 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

மேற்குவங்கம், சத்தீஸ்கரில் தலா 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், திரிபுராவில் தலா ஒரு தொகுதியில் என தேர்தல் நடைபெற இருக்கிறது.
நாளை 89 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மூன்றாவது முறையாக களம் காணும் கோட்டா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி இராசா மோதும் வயநாடு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

https://www.mugavari.in/news/tamilnadu-news/today-gold-rate-11/1875

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், நடிகை ஹேமமாலினி காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
Video thumbnail
போதை பொருள் பயன்படுத்தினேனா? - அமைச்சர் சரத்குமார் விளக்கம்
01:25
Video thumbnail
அனைத்து பேருந்திலும் மகளிருக்கு இலவச பயணம் விரைவில் அறிவிக்கப்படும்.. - விஜய் தமிழன் பார்த்திபன்
00:54
Video thumbnail
பெருந்தலைவர் காமராஜரை பற்றி சுப. வீரபாண்டியன்..
01:12
Video thumbnail
ரீல்ஸ் மோகத்தில் விஜய் | ஆதரிக்கும் தலைவர்கள், தவெகவினர் | Reels | CM Vijay | TVK | TN Political
18:59
Video thumbnail
முரசொலியில் பெ.சண்முகம் குறித்து எழுதப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. - அமைச்சர் ராஜ்மோகன்
01:28
Video thumbnail
"Sports-ஐ எடு... Drugs-ஐ விடு..." என எழுதி கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய்
01:16
Video thumbnail
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல்வர் விஜயுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண்கள்
00:18
Video thumbnail
சட்டப்பேரவையில் முதல்வர் சொன்ன குட்டிக்கதை..- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்
00:46
Video thumbnail
"அப்பாவை அங்க தேடாதீங்க" முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
01:12
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img