ஐபிஎல் வரலாற்றில் சேஸிங்கில் புதிய வரலாற்றை படைத்த பஞ்சாப் கிங்ஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17 வருட ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணி 262 ரன்கள் இலக்கை 18.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து புதிய வரலாற்றை படைத்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 41 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 42வது லீக் போட்டி நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 42வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுனில் நரேன் 71 ரன்னிலும் பில் சால்ட் 75 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் 39 ரன்னிலும் ஆந்தரே ரஸ்செல் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ஸ்ரேயர்ஸ் அய்யர் 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 261 ரன்கள் குவித்தது.

பின்னர் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 54 ரன்னில் ரன் அவுட் ஆக மறுபுறம் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அடுத்து களமிறங்கிய ரில்லி ருசோ 26 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் அதிரடி காட்டிய சசாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்து மிரள வைத்தார். இறுதியில் அணியானது 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 262 ரன்கள் குவித்து சேஸிங்கில் 17 வருட ஐபிஎல் சாதனையை முறியடித்தது. பஞ்சாப் அணியின் ஆட்டநாயகன் விருது சதம் விளாசிய ஜானி பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது.

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img