spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 47 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 48வது லீக் போட்டி நடைபெற்றது. லக்னோவில் உள்ள மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 48வது போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து மும்பை அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 4 ரன்களிலும் இஷான் கிஷான் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன்களிலும் திலக் வர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக நெஹால் வதேரா 46 ரன்கள் எடுத்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது.

பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் லக்னோ அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி ரன் ஏதுமின்றியும் கேஎல் ராகுல் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 62 ரன்களிலும் தீபக் கூடா 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ அணியின் ஆட்டநாயகனாக மார்கஸ் ஸ்டோனிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

 

Video thumbnail
காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் சைக்கிளில் ROAD SHOW
01:07
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பழனிசாமி பேசியது கண்டத்திற்குரியது; அநாகரீகம். - ஓபிஎஸ் விமர்சனம்
01:24
Video thumbnail
கேரளம் சட்டமன்றத் தேர்தல் : வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் நடிகர் மோகன்லால்!
01:01
Video thumbnail
கேரளம் சட்டமன்றத்தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய நடிகர் மம்முட்டி
01:01
Video thumbnail
கண்ணூரில் கேரளம் முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கைச் செலுத்தினார்
00:54
Video thumbnail
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க RX100 பைக்கில் வந்த முதலமைச்சர் ரங்கசாமி
00:52
Video thumbnail
உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் தான் உள்ளது.. - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை | TVK Vijay
19:37
Video thumbnail
"டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள முயற்சி" - திருச்சி சிவா பரபரப்பு பேச்சு | Trichy Siva
16:53
Video thumbnail
"தமிழ்நாடு நிதியை புறக்கணிக்கும் பாஜகவை, தமிழ்நாடு புறக்கணிக்கும்" - உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
15:58
Video thumbnail
கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின்
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img