spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 51 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 52வது லீக் போட்டி நடைபெறுகிறது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 52வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 3 வெற்றி 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 4 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 2 முறையும் குஜராத் அணி 2 முறையும் என சரிசமமாக வெற்றி பெற்றுள்ளன. கடந்த இரு போட்டிகளிலும் தோல்வியடைந்த குஜராத் அணி இப்போட்டியில் எழுச்சி பெற முயற்சிக்கும். அதே சமயம் பெங்களூரு அணி தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹாவும் சுப்மான் கில்லும் களமிறங்கவுள்ளனர்.

 

 

Video thumbnail
விவாகரத்து கிடைக்கும் வரை படம் நடிக்க மாட்டேன் - சென்னையில் நடிகர் ரவிமோகன் பேட்டி
01:45
Video thumbnail
‘போதையில்லா தமிழகத்தை உருவாக்க’ - நிர்மல் குமார் பேட்டி
01:32
Video thumbnail
மனைவியின் மேல்சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் முத்துகாளை முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை
01:11
Video thumbnail
திமுக தோல்விக்கு காரணம்? #MKStalin #DMK #Election2026
01:34
Video thumbnail
மு.க.ஸ்டாலின் தோல்வியை மக்கள் விரும்பவில்லை..
00:53
Video thumbnail
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
01:31
Video thumbnail
தீவிர ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் | நடக்கப்போகும் அதிரடி மாற்றம் | அச்சத்தில் மாவட்டச் செயலாளர்கள் |DMK
18:32
Video thumbnail
முதல்வர் விஜயை சந்தித்த CII நிர்வாகிகள்..! #CMVijay #JosephVijay #TamilNadu #CII #Investment
00:28
Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img