வெற்றிப் பாதைக்கு திரும்புமா டெல்லி? – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 56வது லீக் போட்டியில் டெல்லிvsராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 55 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 56வது லீக் போட்டி நடைபெறுகிறது. டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 56வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 5 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலுள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 8 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 13 முறையும் அணி ராஜஸ்தான் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 9வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் தோல்வியடைந்த டெல்லி அணி தற்போது அதற்கு பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ராஜஸ்தான் அணியானது தங்களது வெற்றியை பெற்று லீக் சுற்றில் முதல் அணியாக தகுதி பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Video thumbnail
தீவிரவாதிகளுக்கு ஆதரவான கட்சி திமுக - சங்கிகள் சதித்திட்டம்
00:51
Video thumbnail
மதுரை ஆதீனத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொ*ல முயற்சியா
00:39
Video thumbnail
வன்முறையை விதைக்கும் பாஜகவினர்
00:51
Video thumbnail
2026 தேர்தல் | கலவரத்தை தூண்ட சங்கிகள் திட்டம்
00:34
Video thumbnail
2026 தேர்தல் | கலவரத்தை தூண்ட சங்கிகள் திட்டம் | வசமாக சிக்கிய மதுரை ஆதினம் | Madurai Adheenam
13:51
Video thumbnail
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | உதயநிதிக்கு புதிய பொறுப்பு | அதிமுகவுடன் தவெக சேருமா? | DMK |ADMK
14:43
Video thumbnail
2026 தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் - திருமாவளவன்
04:28
Video thumbnail
மே தினத்தின் வரலாறு | May Day | Karl Marx
00:53
Video thumbnail
யார் இந்த சிங்காரவேலர் | Singaravelar | May Day
00:52
Video thumbnail
இந்தியாவில் முதல் மே தினம் எங்கு கொண்டாடப்பட்டது May Day
00:37
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img