spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 56 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 57வது லீக் போட்டி நடைபெறுகிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 57வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 வெற்றி 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலுள்ளது. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 98 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த லக்னோ அணி சரிவில் இருந்து மீளுமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த ஐதராபாத் அணி இப்போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி பந்துவீசவுள்ளது. லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுலும் குயிண்டன் டிகாக்கும் களமிறங்கவுள்ளனர்.

Video thumbnail
வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு| திமுக & அதிமுக 2 கட்சிகளுக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு DMK ADMK
13:57
Video thumbnail
"விசில் பட்டனை அழுத்துங்க" | Gen Z நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் | TVK Vijay | தவெக |Election
19:45
Video thumbnail
TVK VIJAY | த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | Tamilaga Vettri Kazhagam
55:22
Video thumbnail
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு | DMK Candidate List | CM MK Stalin | TN Election
14:43
Video thumbnail
அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்
02:16
Video thumbnail
சசிகலாவை சந்தித்து நடிகர் கார்த்திக் திடீர் ஆலோசனை!
00:41
Video thumbnail
முட்டாள்களின் ஒட்டு மொத்த கூடாரம் தவெக.. #tvk #vijay
01:11
Video thumbnail
என் கணவரை விட, விஜய் மாமாவை தான் ரொம்ப புடிக்கும் #tvk #dmk #vijay
01:39
Video thumbnail
"கட்சியில் இருந்து ஒரு பெண் வெளிய வந்தா இப்படி தான் பேசுவீங்களா?" - ரஞ்சனா நாச்சியார் புகார் TVK
03:19
Video thumbnail
பொன்ராஜ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்த விஜய்.. முட்டாள்களின் ஒட்டு மொத்த கூடாரம் தவெக |TVK
12:06
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img