spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

லக்னோ அணியை பந்தாடியது ஐதராபாத் அணி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி இரண்டாவது பேட்டிங்கில் 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 56 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 57வது லீக் போட்டி நடைபெற்றது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 57வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி பந்துவீசியது. லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 29 ரன்களிலும் குயிண்டன் டிகாக் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 3 ரன்களிலும் குருணால் பாண்ட்யா 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய ஆயுஷ் பதோனி 50 ரன்களிலும் நிகோலஸ் பூரன் 48 ரன்களும் எடுத்து அணியை ஒரளவு நல்ல இலக்கிற்கு கொண்டு சேர்த்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் 4 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி பந்தை நாலாபுறம் பறக்கவிட்ட டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் வெறும் 9.4 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து அபார விளையாடி அணியை வெற்றி பாதைக்கு திருப்பினார்கள் . இதில் டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்களும் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தனர். ஐதராபாத் அணியின் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.

Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
Video thumbnail
8200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
00:24
Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img