பெண் வேடத்தில் – யோகி பாபு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பெண் வேடத்தில் - யோகி பாபு

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வரும் யோகி பாபு, மண்டேலா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கின. அதன்படி ஒரு பக்கம் காமெடி நடிகராக நடித்தாலும் மறுபக்கம் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் போட் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இன்னும் ஏகப்பட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ள யோகி பாபு, மிஸ் மேகி எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு பெண் வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனை லதா ஆர் மணியரசு இயக்கியுள்ளார். ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. கௌதம் ராஜேந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முதல் நாளில் மூன்று கோடி வசூல் – ‘மெய்யழகன்’

காமெடி கலந்த கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் இணையத்தில் ரசிகர்களால் கவனம் பெற்று வைரலாகி வருகிறது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img