spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘காந்தாரா 2’ படத்தில் பிரபல மலையாள நடிகர்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

காந்தாரா 2 படத்தில்  மலையாள நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகி இருந்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது. அஜனீஸ் லோக்நாத் இதற்கு இசை அமைத்திருந்தார். அரவிந்த் எஸ் காஷ்யப் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த படத்தினை ரிஷப் ஷெட்டியே இயக்கியும் இருந்தார். இந்த படம் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் ரிலீஸான பின் இந்த படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தில் நடித்ததற்காக ரிஷப் ஷெட்டி தேசிய விருதினையும் வென்றுள்ளார்.

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ரிஷப் ஷெட்டி, காந்தாரா 2 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். ஆனால் இந்த படம் சீக்குவலாக இல்லாமல் முதல் பாகத்தில் ப்ரீக்குவலாக உருவாகி வருகிறது.
கிபி 301 முதல் 400 காலகட்டங்களில் நடப்பது போன்று கதை உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி எதிர்பார்ப்புகளை எகிற செய்தது.

 

‘ஹிட்லர்’ படத்திற்கு கிடைத்த வெற்றி விஜய் ஆண்டனி ரசிகர்களுடன் கொண்டாட்டம்.

மேலும் இந்த படத்தினை 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் கூடுதல் தகவல் என்னவென்றால், இதில் ரிஷப் ஷெட்டியின் தந்தையாக பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

இந்தத் தகவல் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே திரையரங்குகளில் இப்படத்தை காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
Video thumbnail
கண்ணீரோடு இரங்கல்.. வீடியோ வெளியிட்ட கலா மாஸ்டர்
02:22
Video thumbnail
ஆவடி ரயில் நிலையம் அருகே துணி கடையில் பயங்கர தீ விபத்து. மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் தீ விபத்து
00:42
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img