தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் நலத்துறை உத்தரவு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் நலத்துறை உத்தரவு

மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய  விடுமுறை அளிக்க வேண்டும்  தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல்  ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம்

இந்நிலையில், தமிழகத்தில்  மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இதன்படி ஒவ்வொரு  வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய  விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள்,கடைகள், உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிபிஓ (BPO) நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி அதற்கான எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Video thumbnail
பொங்கலுக்குள் மாதவரம் ஏரியில் பொதுமக்களுக்கு படகு சவாரி - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
01:20
Video thumbnail
சாலையில் சென்ற பெண் மீது மோதிய ஆட்டோ | சிசிடிவி காட்சி
00:27
Video thumbnail
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
01:37
Video thumbnail
'அரசன்' திரைப்பட படப்பிடிப்புக்கு இடையே மதுரையில் ரசிகர் சந்திப்பு நடத்திய நடிகர் சிம்பு
00:44
Video thumbnail
குழந்தைகளுக்கு கேக் வெட்டி கொடுத்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய தவெக தலைவர் விஜய்
01:11
Video thumbnail
கண்டிப்பா ஒரு ஒளி பிறக்கும்.. அந்த ஒளி நம்மை வழிநடத்தும் | கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேச்சு
06:09
Video thumbnail
தேர்தல் என்பது ஒரு நாள் வரும் திருவிழா அல்ல… – திமுக எம்.பி திருச்சி சிவா
01:47
Video thumbnail
தவெக சார்பில் நடக்கும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை துவக்கி வைத்த விஜய்
00:48
Video thumbnail
அதிமுக பாஜக கூட்டணியில் தவெக கட்சி இணைந்தால் எப்படி இருக்கும்?
01:26
Video thumbnail
தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
01:16
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img